ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது என்று  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது 
ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது என்று  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது 

பொதுமக்களின் தொடர் போராட்டம் மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, தூத்துகுடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் தமிழக அரசால் மூடப்பட்டது. 

அதை மீண்டும் திறக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேசமயம் இதுதொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று பசுமைத் தீர்ப்பாயததால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றின் தரக் குறியீட்டு எண் தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் ஞாயிறன்று வெளியிடப்பட்டது. அதில் தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு கணிசமாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சல்பர் டை ஆக்சைடின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வறிக்கையானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com