ஜி.எஸ்.டி., இணைய வழி ரசீது குறித்து 11-இல் பயிற்சி

சரக்கு -சேவை வரி (ஜி.எஸ்.டி.), இ-வே பில் எனப்படும் இணைய வழி ரசீது ஆகியன குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 11 -ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது


சரக்கு -சேவை வரி (ஜி.எஸ்.டி.), இ-வே பில் எனப்படும் இணைய வழி ரசீது ஆகியன குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 11 -ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
தொழில்முனைவோர்களுக்காக ஜி.எஸ்.டி., இணைய வழி ரசீது ஆகியவை குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 11 -ஆம் தேதி நடத்தப்படுகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இந்த வகுப்பு நடத்தப்படும். இதற்கு நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களை, 044-2225 2081, 2225 2082, 88254 16460 மற்றும் 86681 02600 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ, www.editn.in என்ற இணையதளத்திலோ பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com