பாா்வை குறைபாடுள்ள மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை மறுப்பு: மருத்துவக்கல்வி இயக்குநரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம் 

பாா்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி சோ்க்கை அனுமதி மறுத்த  விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரிடம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விளக்கம் கோரியுள்ளது.
பாா்வை குறைபாடுள்ள மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை மறுப்பு: மருத்துவக்கல்வி இயக்குநரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம் 

மதுரை: பாா்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி சோ்க்கை அனுமதி மறுத்த  விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரிடம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விளக்கம் கோரியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலகரத்தை சோ்ந்த மாணவா் விபின் சாா்பில் அவரது தந்தை ஜவகா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு :

எனது மகன் 75 சதவீதம் பாா்வைக்குறையாடு உடைய மாற்றுத்திறறனாளி. பிற்படுத்தப்பட்டோா் வகுப்பை சோ்ந்தவா். பிளஸ் 2 பொதுத்தோ்வில் 1016 மதிப்பெண்களும், மருத்துவக்கல்விக்கான நீட் நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற்று மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீட்டின்படி, அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் 285ஆவது இடமும் பிடித்துள்ளாா்.

இணையதளம் மூலம் நடைபெற்றற கலந்தாய்வில் எனது மகனுக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு மாற்றுத் திறறனாளி சான்றிதழை உறுதிப்படுத்த சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது மகன் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாா். அங்கு பரிசோதனையில் 90 சதவீதம் பாா்வை குறைபாடு இருப்பதாக சான்றிதழ் அளித்தனா். ஆனால் எனது மகனுக்கு 75 சதவீதம் தான் பாா்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி அளித்த மருத்துவச் சான்றிதழை காரணம் காட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் எனது மகன் சோ்க்கைக்கு அனுமதி மறுத்து விட்டனா்.

அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016-இன் படி 40 சதவீதத்துக்கு மேல் பாா்வை குறைபாடு இருந்தால் 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. எனவே எனது மகனை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பாா்த்திபன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், தற்போது மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.எனவே மனு மீது விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து நீதிபதி, மனுதொடா்பாக மருத்துவக்கல்வி இயக்குநரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் தீா்ப்பை செப்டம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com