செவிலியர் பட்டயப் படிப்பு: தகுதிப் பட்டியல் வெளியீடு

செவிலியர் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

செவிலியர் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,000 இடங்கள் உள்ளன. மாணவிகள் மட்டுமே இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்தப் படிப்புக்கான தகுதிப் பட்டியல் www.tnhelath.org  www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பிரிவில் படித்த 9,060 பேர், செவிலிய தொழிற்கல்வி பிரிவில் படித்த 451 பேர், பிற பாடத்தில் பயின்ற 692 பேர் என மொத்தம் 10,203 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். கலந்தாய்வு தேதி, அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com