மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்

மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாடெங்கும் மனித உரிமைகள் நசுக்கப்பட்டு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், பொய் வழக்குகள் போடப்படுவதும் நீடித்து வருகின்றன. இதற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்குரியது. தற்போது நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. ஆனால், மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி முடக்க முயல்வதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவர் கனடாவில் கல்வியைத் தொடரத் தடையாக அமையும். எனவே, அவர் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com