மேக்கேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. இதனை மத்திய நீர் வளத் துறை நிராகரிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட எந்த மாநிலத்துக்கும் அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் எடுப்பது ஏற்புடையதல்ல. 
ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை இருக்கும்போது, தன்னிச்சையாக மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசை கர்நாடக அரசு நாடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையையும் நிராகரிக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com