திருமலை பிரம்மோத்ஸவ விழாவுக்கு ராசிபுரத்திலிருந்து 7 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோத்ஸவ விழாவுக்காக, ராசிபுரத்தில் இருந்து சுமார் 7 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.


திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோத்ஸவ விழாவுக்காக, ராசிபுரத்தில் இருந்து சுமார் 7 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவுக்கு நறுமண மலர்களை சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் அனுப்பி வைக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவுக்காக, நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரத்தில் ஸ்ரீவித்யாலயம் கலையரங்கில் மலர் தொடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு மலர்கள் தொடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 7 டன் எடையில் ரோஜா, சாமந்தி, துளசி, தாமரை, தாழம்பு, மேரிகோல்ட் போன்ற மணமுள்ள மலர்களும், தென்பாளை, தென்னங்குருத்து, இளநீர் குலை உள்பட பல்வேறு வகையான பூக்களும் தொடுக்கப்பட்டன. 
இந்தப் பணியில் ராசிபுரம், ஈரோடு, ஆத்தூர், கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். இவை அனைத்தும் லாரி மூலம் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com