சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை (டீன்') நியமித்து மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் திருமால்பாபு, தஞ்சாவூருக்கு டாக்டர் குமுதா, தேனிக்கு டாக்டர் ராஜேந்திரன், தூத்துக்குடிக்கு டாக்டர் வசந்தி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.