பட்டாசு மூட்டைகள் வெடித்து மூவர் சாவு: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

ஈரோடு அருகே தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்ட
வெடி விபத்தில்   சேதமடைந்த  வீடுகள்.
வெடி விபத்தில் சேதமடைந்த வீடுகள்.


ஈரோடு அருகே தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு அருகே உள்ள சாஸ்திரி நகர், வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கார்த்திக் (30). இவர்களுக்குச் சொந்தமான, வளையக்கார வீதியில் உள்ள மளிகைக் கடையை ஜாஸ்மின் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இம்மளிகைக் கடையின் முன்பு சுகுமாரும், கார்த்திக்கும் தீபாவளி பண்டிகைக்காக கட்டில் போட்டு பட்டாசுகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், ஒரு சரக்கு வாகனத்தில் 15 மூட்டைகளில் பட்டாசுகளை புதன்கிழமை காலை வாங்கி வந்தனர். பட்டாசு மூட்டைகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் விழுந்தன.
இந்த விபத்தில், மளிகைக் கடை உரிமையாளர் கார்த்திக், பட்டாசுகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்த ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (40), ஈரோடு சுத்தானந்தன் நகரைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் செந்தூர்பாண்டி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈரோடு போலீஸார், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடி விபத்து குறித்தும், வெடிபொருள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், விற்பனைக்காக வாங்கப்பட்டவை தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களான கல்வெடி எனும் அதிக ஒலி எழுப்பும் வகையைச் சேர்ந்தவை என்பதும், அதிக அழுத்தம் ஏற்பட்டதால் வெடித்துச் சிதறியதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com