மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 1,000 ஆக உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,000 ஆக விலை உயர்ந்துள்ளளது.
சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பூ ஏல விற்பனையில் பங்கேற்ற விவசாயிகள்.
சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பூ ஏல விற்பனையில் பங்கேற்ற விவசாயிகள்.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,000 ஆக விலை உயர்ந்துள்ளளது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் பூக்கள் உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. பவானிசாகர், இக்கரை நெகமம், தாண்டாம்பாளையம், வெள்ளியம்பாளையம், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி சாகுபடி செய்து வருகின்றனர். பூக்களின் வரத்து தினந்தோறும் 4 டன்னாக இருந்தது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பூக்கள் மகசூல் குறைந்து ஒரு டன்னாக சரிந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் மல்லி கிலோ ரூ. 500 லிருந்து ரூ. 1,000 ஆக விலை உயர்ந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்தில் தோட்டங்களில் சாகுபடி செய்த பூக்கள், மலர் விவசாயிகள் சங்கத்தில் ஏலம் விடப்பட்டது. விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மல்லி கிலோ ரூ. 1,000 ஆகவும், முல்லை ரூ. 560 ஆகவும், காக்கடா ரூ. 650 ஆகவும், செண்டுமல்லி ரூ. 24 க்கும், கனகாம்பரம் ரூ. 550 க்கும், சம்பங்கி ரூ. 240 க்கும் விற்கப்பட்டது.
கடந்த வாரத்தைவிட தற்போது பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com