மூன்று மாநில வன எல்லையில் அதிரடிப்படை ஏடிஜிபி ஆய்வு

கூடலூர் அருகே கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையையொட்டி உள்ள தமிழக வனப் பகுதியில் அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கூடலூர் அருகே கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையையொட்டி உள்ள தமிழக வனப் பகுதியில் அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முதுமலை புலிகள் காப்பத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் எல்லையிலும், மூன்று மாநில வனப் பகுதிகள் சந்திக்கும் இடத்திலும் ஏ.டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
நக்ஸல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன் ராவ், சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.எஸ்.பி. சக்திவேல், மசினகுடி ஆய்வாளர் முரளிதரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், உள்ளூர் போலீஸார், வனத் துறையினர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com