அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே மானியம் : புதுவை ஆளுநர் கிரண் பேடி

அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே மானியம், நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே மானியம் : புதுவை ஆளுநர் கிரண் பேடி


அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே மானியம், நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து தனது கட்செவி அஞ்சல் மூலம் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட பதிவு: ஆளுநர் மாளிகை அலுவலகம் அரசு மானியத்தை எதற்காக ஒதுக்கீடு செய்கிறதோ அதற்கே அதைச் செலவு செய்ய வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதிச் செலவினங்களில் ஆட்சேபம் இருந்தால் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் அதற்குப் பதில் தர வேண்டும். இதுதொடர்பாக எப்போது விளக்கம் கேட்டாலும் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
விதிப்படி செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் விதிப்படித்தான் செயல்பட வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே மானியம், நிதியுதவி வழங்கப்படும். 
கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்கு அதிக அளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்கள் குறுகியதாக இருக்கும் போது ஒவ்வொரு ரூபாயும் கணக்கிடப்பட வேண்டும். 
இதை உணர்ந்து தேவையான மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதுவையின் தற்போதைய நிலைமையை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் சிறந்த நிர்வாகத்தை அளிக்கவும் 
ஆளுநர் மாளிகை தயாராக உள்ளது என தனது கட்செவி அஞ்சலில் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com