தொழுநோயாளிகளிடம் பாகுபாடு கூடாது; விழிப்புணர்வு விளம்பரத்தை மாற்றுக: உச்ச நீதிமன்றம் 

தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்றும், தொழுநோய் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தை அதற்கேற்ற வகையில் மாற்றியமைக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழுநோயாளிகளிடம் பாகுபாடு கூடாது; விழிப்புணர்வு விளம்பரத்தை மாற்றுக: உச்ச நீதிமன்றம் 


புது தில்லி: தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்றும், தொழுநோய் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தை அதற்கேற்ற வகையில் மாற்றியமைக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே  இந்த வழக்கில் விவாகரத்து செய்வதற்கான காரணங்களில் இருந்து தொழுநோயை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

தொழுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளிகளில் தொழுநோய் பாதித்த குழந்தைகள் தனிமைப்படுத்தக் கூடாது. தொழு நோயாளிகளுக்கான அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். தொழு நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கும் சராசரி மக்களைப் போல வாழ உரிமை உண்டு. 

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவது போல தொழுநோயாளிகளுக்கும் தனியாக சான்றிதழ் வழங்கவும், மருத்துவமனைகளில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை பெறவும் அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

அதே போல தொழு நோயாளிகளுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான அட்டையை வழங்க வேண்டும். இதன் மூலம் அடிப்படையான சில சேவைகளை அவர்களும் பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தொழுநோய் பாதித்து கைவிரல்களை இழந்தவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்காமல் பல நோயாளிகள் குடும்பமும் கைவிட்ட நிலையில் அரசு உதவிகளையும் இழந்து சொல்லொணாத் துயரில் ஆழ்ந்த சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் பலரும் பயனடைவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com