பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முயற்சி

பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது என்றார் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முயற்சி


பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது என்றார் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. கூட்டணி வைத்துதான் போட்டியிடுவோம் என கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். திமுகவுடன் கூட்டணி என்பதை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் இதுவரை கற்பனை செய்யவில்லை. இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன் விமானத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியா முழக்கம் எழுப்பியது விதிமுறை மீறல். சோபியாவின் செயல் உரிமை அல்ல. ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பின்னணி என்ன? என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் கட்சித் தலைவரின் நோக்கம். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விஜய் மல்லையா மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. 
இருவரும் அதை சாதாரண சந்திப்பாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.
தமிழக அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலை இதுவரை வரவில்லை. எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றமும், விசாரணைக் குழுவும்தான். பெட்ரோல், டீசல் விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இந்த விலையைக் குறைப்பதற்கு ஆலோசனை செய்வதற்காக பிரதமர் மோடி ஒரு கூட்டத்தை வரும் 15 ஆம் தேதி கூட்டியுள்ளார். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவந்தால் 25 சதவீதம் விலை குறையும். அதற்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். 
மாநில அரசுகளை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கட்டும். அதுவரை பொறுத்திருப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com