அண்ணா பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் செப்டம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 
அண்ணா பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் செப்டம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சியினர் சிறப்புக் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அண்ணா பிறந்தநாள், ஈ.வே.ரா பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உதயமான நாள் என மூன்றையும் ஒன்றாக அனுசரிக்கும் விதமாக முப்பெரும் விழாவை இந்த ஆண்டு விழுப்புரத்தில் கொண்டாட திமுக முடிவுசெய்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள காமராஜ் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் இருக்கும் அண்ணா திடலில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com