அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம்: வேதாரண்யத்தில் நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஒரு வாரகாலம் நடைபெறவுள்ள "அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்

தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஒரு வாரகாலம் நடைபெறவுள்ள "அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்; இந்தியாவைப் பாதுகாப்போம்' என்ற பிரசார இயக்கம் வேதாரண்யத்தில் திங்கள்கிழமை (செப். 17) தொடங்குகிறது.
 இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
 அரசியல் அமைப்பு சட்டம் வகுத்தளித்த பேச்சுரிமை, எழுத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை, ஜாதி, இனம், மதம், பாலினம் சார்ந்த வேறுபாடின்மை ஆகிய அனைத்தும் நசுக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.
 இதேபோல், இயற்கை வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண்மை, வணிக நிறுவனங்கள், கைத்தறி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுக்கு எதிரானவைகளை முன்வைத்தும் பிரசாரம் நடத்தப்படவுள்ளது.
 மாநிலம் தழுவிய அளவில், 5 முனைகளில் தொடங்கி தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து செப்.23-ஆம் தேதி திருப்பூரில் பிரசாரம் நிறைவுபெறும்.
 உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், பிரசாரத்தின் ஒரு பகுதி வேதாரண்யத்தில் இருந்து தொடங்கவுள்ளது.
 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கும் நிகழ்ச்சியில், கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன் பங்கேற்கிறார்.
 இதில், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com