கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிப்பு: அக். 6 -இல் மனு தாக்கல்

கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 197 சங்கங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 197 சங்கங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 இரண்டாம் கட்டமாக 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், 12 மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையங்கள், 14 மாவட்ட நெசவாளர் கூட்டுறவு இணையங்கள், 6 கூட்டுறவு நூற்பாலைகள், எட்டு மாவட்ட பனைபொருள் கூட்டுறவு இணையங்கள் உள்பட 197 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தச் சங்கங்களின் 2,448 நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில், 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 8 -ஆம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 9 -ஆம் தேதியும் வெளியிடப்படும். அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அக்டோபர் 12- இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com