சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பசுமை கட்டட சான்றிதழ்

தெற்கு ரயில்வேயில் பசுமைக் கட்டடச் சான்றிதழை பெற்ற முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றுள்ளது
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பசுமை கட்டட சான்றிதழ்

தெற்கு ரயில்வேயில் பசுமைக் கட்டடச் சான்றிதழை பெற்ற முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றுள்ளது.
 மின்சிக்கனத்துக்கு 100 சதவீதம் எல்.இ.டி. விளக்குகள் பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, பசுமைக் கழிப்பறை, தூய்மையான வளாகம், மருத்துவ வசதி, குடிநீர் சுத்திகரிப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், சூரிய மின்சக்தி, அத்துடன் சூரியசக்தி மூலம் 90 சதவீதம் சுடுநீர் தேவையை பூர்த்தி செய்தல், 100 சதவீதம் 5 நட்சத்திர மின்விசிறி, தினமும் 10 லட்சம் லிட்டர் நீரை மறுசுழற்சி செய்யும் ஆலை, நிலையத்தில் பயணிகள் தகவல் முறைகள் உள்ளிட்ட வசதிகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டுள்ளதையடுத்து இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.
 இந்திய பசுமை கட்டட கவுன்சில் இந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) கடந்த 2001-ஆம் ஆண்டு ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
 பசுமை சார்ந்த கட்டடம் இந்த கவுன்சிலின் தொலைநோக்கு பார்வையாகும். அதன் அடிப்படையில், கட்டட வடிவமைப்பு, பசுமையான சூழல், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பீடு வழங்கி கட்டடச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 இதுவரை 1,250 திட்டங்களுக்கும் மேலாக இந்திய பசுமை கட்டட கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது.அவ்வகையில், தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக பசுமைக் கட்டட சான்றிதழ் பெறுவதற்கான மதிப்பீடுகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்று அதற்கான சான்றிதழை பெற்றுள்ளது.
 இந்த சான்றிதழை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றுள்ளதன் மூலம் பிற ரயில் நிலையங்களும் பசுமை கட்டடச் சான்றிதழ் பெறுவதற்கு உந்துதலாக அமையும்.
 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில் நிலையத்துக்கான பசுமை கட்டடச் சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டாவிடம் இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமைக் கட்டடக் கவுன்சில் தலைவர் சி.என். ராகவேந்திரன் வழங்கினார். சென்னை கோட்ட ரயில்வே பொதுமேலாளர் நவீன் குலாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com