தமிழிசையைக் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜகவினர்: அப்படி என்னதான் கேட்டுவிட்டார்?

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் மிரட்டி இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.
தமிழிசையைக் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜகவினர்: அப்படி என்னதான் கேட்டுவிட்டார்?


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் மிரட்டி இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழிசை பதிலளித்துக் கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோல், டீசல் விலை இப்படி கடுமையாக உயர்ந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பினார்.

தமிழிசை இந்தக் கேள்வியை கேட்டும் கேட்காதது போல விட்டுவிட்டு சிரித்தபடி நிற்க, அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜக பிரமுகர், ஆட்டோ ஓட்டுநரை பின்னால் தள்ளி கேமராவில் இருந்து அப்புறப்படுத்த, அங்கிருந்த பாஜகவினர் அவரை தாக்கினர். தனக்குப் பின்னால் ஒருவர் தாக்கப்படுவதை  அறிந்தும், அறியாதது போல சிரித்தபடியே நின்றிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.

இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ ஓட்டுநர் கதிர் கூறுகையில், ஆட்டோ வாடகை, பெட்ரோல் விலை போக தினமும் முழு நேரமும் வேலை செய்தாலும் ரூ.300 தான் சம்பாதிக்க முடிகிறது. இதை வைத்துக் குடும்பம் நடத்துவது எப்படி? ஒரு சில நாட்கள் ஆட்டோ வாடகைக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் போகிறது, இதைக் கேட்டால் என்னை அடிக்கிறார்கள் என்கிறார் கதிர்.

இது பற்றி சம்பவத்தை நேரில் பார்த்த சில பத்திரிகையாளர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com