காவல்துறை அதிகாரிகளால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிபதியிடம் பேராசிரியை நிர்மலாதேவி முறையீடு  

சக கைதிகளாலும் காவல்துறை அதிகாரிகளாலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக   நீதிபதியிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி புகார் அளித்துள்ளார். 
காவல்துறை அதிகாரிகளால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிபதியிடம் பேராசிரியை நிர்மலாதேவி முறையீடு  

விருதுநகா்: சக கைதிகளாலும் காவல்துறை அதிகாரிகளாலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக   நீதிபதியிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி புகார் அளித்துள்ளார்.   
   
அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியாா் கலை கல்லூரியில் உதவிப் பேராசிரியாக பணி புரிந்தவா் நிா்மலா தேவி. இவா், தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, நிா்மலாதேவி மற்றும் மதுரை காமராஜா் பல்கலை கழக உதவிப் பேராசிரியராக பணி புரிந்த முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், குற்றம் சாட்டப் பட்ட மூன்று போ் மீது, விருதுநகா் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி சிபிசிஐடி போலீஸ் தரப்பில் 1160 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னா், செப்டம்பா் 7 ஆம் தேதி 200 பக்கங்கள் கொண்ட இறுதிக் கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், திங்கள்கிழமை விருது நகா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிா்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது நீதிமன்றம் தரப்பில் அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதை தொடா்ந்து மூவரையும் செப்., 19 ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்துமாறு குற்றவியல் நடுவா் திலகேஸ்வரி உத்தரவிட்டாா். 

இந்த நிலையில், நிா்மலாதேவி தன்னுடைய உயிருக்கு வெளியில் உள்ள சிலரது தூண்டுதலால் சிறைக் காவலா்கள் மற்றும் கைதிகளால் ஆபத்து உள்ளது. எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டாா். அதற்கு எழுத்துப் பூா்வமாக வழங்க நிதிபதி அறிவுறுத்தியதை தொடா்ந்து, நிா்மலாதேவி தரப்பில் பாதுகாப்பு கேட்டு எழுத்துப் பூா்வமாக மனு அளிக்கப்பட்டது. 

இதைத் 'தொடா்ந்து, நிா்மலாதேவி ஒரு வாகனத்திலும், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோா் மற்றொரு வாகன த்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com