நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம்: விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக முதல்வர் எடப்படாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும்
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம்: விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு


தமிழக முதல்வர் எடப்படாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் பெரும்பாலும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. 
எனவே, இம்முறைகேடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக தினசரி மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட விசாரணை குறித்த விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரரின் வழக்குரைஞர் வாதம்: அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, உலக வங்கியின் விதிமுறைப்படி, அரசின் ஒப்பந்தப் பணிகளை வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்கக் கூடாது. ஆனால், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை வழங்கும் குழுவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார், அவரது உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, உலக வங்கியின் விதிமுறைகளை மீறிய செயலாகும் என வாதிட்டார்.
அரசு தலைமை வழக்குரைஞர் வாதம்: அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ஒப்பந்தப் பணிகளை பெற்றுள்ள நிறுவனங்கள் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தங்களைப் பெற்று வருகின்றன. மனுதாரர் கூறுவதைப் போல உலக வங்கியின் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தாலும் அதை சிவில் பிரச்னையாகத்தான் கருத முடியும் என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தப் பணிகளை வழங்கும் குழு, வழிகாட்டும் குழு உள்ளிட்ட குழுக்கள் எப்போது உருவாக்கப்பட்டன, அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் விவரங்கள், குழுக்களின் தலைவர்கள் குறித்த விவரங்கள், இந்த குழுக்களின் மூலம் யாருக்கெல்லாம் ஒப்பந்தப்பணிகள் வழங்கப்பட்டுள்ளன, அந்த ஒப்பந்தப் பணிகள் எப்போது வழங்கப்பட்டன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
செப்.26-க்கு ஒத்திவைப்பு: இதையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது, இதனையடுத்து விசாரணையை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com