பிரான்ஸ் -தமிழகம் இடையே பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வகையில்,
பிரான்ஸ் - தமிழகம் இடையேயான பண்பாட்டு பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், 
பிரான்ஸ் - தமிழகம் இடையேயான பண்பாட்டு பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், 


தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வகையில், அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நுண்கலைகளை இளைய தலைமுறையினருக்கு இசை, கவின் கலைக் கல்வி பயிலகங்கள் மூலமாகக் கொண்டு செல்லவும், நுண் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்தும் தமிழக கலை பண்பாட்டுத் துறை செயல்படுத்தி வருகிறது. 
இதே நோக்கில் செயல்படும் பிரான்சின் சென்டர் வால் டி லோயர்' மாநில கலாசார அமைச்சகம், தமிழகத்தின் கலாசார செழுமை கருதி தனியார் அமைப்புகளின் ஆதரவுடன் தமிழகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. 
சென்டர் வால் டி லோயர்' மாநிலம், தமிழக அரசின் ஆதரவுடன் கலாசார பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அண்மையில் பிரான்ஸ் சென்றார். அங்கு ஆர்லியான்ஸ் நகரில் செப்டம்பர் 7 -ஆம் தேதி, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சர்வதேச நல்லுணர்வு உறுப்பினர் ஓ.பிரிசாட் , அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்கள்: இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்திலும் கலை பரிமாற்றத் திட்டத்தின்கீழ் நடைபெறும். இதேபோன்று ஓவியம், சிற்பம், கைவினைக் கலைஞர்களின் கண்காட்சிகள் இரு மாநிலங்களிலும் பரிமாற்ற அடிப்படையில் நடைபெறும். இசை வகுப்புகள் வாய்ப்புள்ள இடங்களில் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
தமிழகத்தில் கலைக் கல்வி பயிலும் மாணவர்கள் பிரான்ஸ் சென்று அங்குள்ள கலைக் கல்வி நிறுவனங்களை பார்வையிடவும், பிரான்ஸ் மாணவர்கள் நமது கலைக் கல்வி நிலையங்களைப் பார்வையிடவும் தேவையான உதவிகள் செய்யப்படும். 
கலை தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் செய்யும் வகையில் வல்லுநர்கள் வருகை புரிவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பிலும் செய்வதற்கான வரைவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com