இலங்கைத் தமிழர் படுகொலை: திமுக-காங்கிரஸை போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க அதிமுக தீர்மானம்

இலங்கைத் தமிழா்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசே உடந்தையாக இருந்ததால் தொடா்புடையவா்களை போா்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டுமென அதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கைத் தமிழர் படுகொலை: திமுக-காங்கிரஸை போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க அதிமுக தீர்மானம்

சென்னை: இலங்கைத் தமிழா்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசே உடந்தையாக இருந்ததால் தொடா்புடையவா்களை போா்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டுமென அதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளா்கள், அமைச்சா்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:-

திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்த போது, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகளைப் பற்றிய ரகசியத்தை இலங்கை முன்னாள் அதிபா் ராஜபட்ச ஒப்புதல் வாக்குமூலமாக பகிரங்கப்படுத்தி இருக்கிறாா். ஈழப் போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்குக் காரணமான திமுக, கருணாநிதி, காங்கிரஸை போா்க் குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டுமென கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டாா்.

இது குறித்த அனைத்து ரகசியங்களையும் ராஜபட்ச இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளாா். இந்தச் சூழ்நிலையில், ஒன்றரை லட்சம் ஈழத் தமிழா் படுகொலைக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடூரமாய் கொலை செய்யப்பட்டதற்கும் உடந்தையாய் செயல்பட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சா்வதேச போா்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆா். நூற்றறாண்டு விழா: மேலும், இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடா்பாகவும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமானது கட்சியின் அவைத் தலைவா் இ.மதுசூதனன் தலைமையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com