ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ரத்து செய்யுங்கள்!: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநருக்கு தமிழகம் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் செப்டம்பர் 22 முதல் 24-ஆம் தேதி வரை மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகளை ரத்து செய்ய


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் செப்டம்பர் 22 முதல் 24-ஆம் தேதி வரை மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வரும் 22 முதல் 24-ஆம் தேதி வரையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் டி.சேகர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குநரகத்துக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஆலையிலும், சென்னையிலும் வரும் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் தங்களது குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதற்கான தகவல் எங்கள் அலுவலகத்துக்கு கடந்த 17-ஆம் தேதி மாலை 6.52 மணிக்குக் கிடைத்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பின்பற்றுவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியுள்ளது.
ரத்து செய்யுங்கள்: இந்த வழக்குகளுடன் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கடந்த 10-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கடந்த 14-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. எனவே, நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் இருப்பதால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியக் குழுவானது தனது ஆய்வுப் பயணத்தை தள்ளிப் போடும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஸ்டெர்லைட் ஆலையைப் பார்வையிட வகுத்துள்ள பயணத் திட்டத்தை ரத்து கூட செய்திடலாம். இதனை குழுவிலுள்ள தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் தாங்கள் உடனடியாகத் தெரிவித்திட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் டி.சேகர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com