10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை பிறப்பித்தார். 
மாற்றப்பட்டவர்கள் விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக் குறிக்குள்)
ரீட்டா ஹரீஸ் தாக்கர்: சர்க்கரைத் துறை ஆணையாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர்)-- தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் ரீட்டா ஹரீஸ் செயல்படுவார்.
ஜெ. விஜயராணி: வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் (நில நிர்வாக இணை ஆணையாளர்)
கே.கற்பகம்: நில நிர்வாக இணை ஆணையாளர் (தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்)
பிங்கி ஜோவல்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலாளர் (சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர்)
எம்.பாலாஜி: டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன திட்ட கூடுதல் செயலாளர் (வணிக வரித்துறையில் பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளர்)
ஜெ.மேகநாத ரெட்டி: வணிக வரி பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளர் (நில நிர்வாக கூடுதல் ஆணையாளர்)
டி.ஜெகந்நாதன்: சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளர் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
அதுல் ஆனந்த்: பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளர்)
குமரவேல் பாண்டியன்: பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர்-கல்வி (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர்)
என்.வெங்கடாசலம்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர்)
கூடுதல் பொறுப்பு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலராக உள்ள எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com