காற்றாலை மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

உற்பத்தியே இல்லாத காற்றாலையிலிருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி
காற்றாலை மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு


உற்பத்தியே இல்லாத காற்றாலையிலிருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வின்போது இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெறாத மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டதாக, தூத்துக்குடி மேற்பார்வையாளரே நவம்பர் 29-ஆம் தேதி கடிதம் அனுப்பி, அதன் அடிப்படையில் அரசுப் பணம் சூறையாடப்பட்டுள்ளது. குறிப்பாக 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் 1.35 கோடி யூனிட்டுகள் காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலியான கணக்குத் தயார் செய்யப்பட்டு ரூ. 9.17 கோடி ஊழல் நடைபெற்றிருப்பது முதல் கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.
இதே போன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் காற்றாலை மின்சார ஊழல் குறித்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இந்த ஊழலுக்குத் துணை போயிருக்கும் அமைச்சர் பதவி விலகி, சுதந்திரமான விசாரணைக்கு வழி விட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com