காவலர்களின் செயல்பாடு: முதல்வர் பாராட்டு

தீய பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமென காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலர் நிறை வாழ்வு பயிற்சித் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலர் நிறை வாழ்வு பயிற்சித் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,


தீய பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமென காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் காவலர்களுக்கு நிறை வாழ்வுப் பயிற்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை: காவல் துறையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து சமூக விரோதிகளைச் சண்டையிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தீவிரவாதிகளின் நடமாட்டத்தினை தமிழகத்தில் முழுவதுமாகக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதை காவலர்கள்திறம்படச் செய்து வந்தாலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களைக் கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
சமுதாயத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்கள், நியாயம் கோரி காவல் நிலையங்களுக்கு வரும் போது, அவர்களை மனித நேயத்தோடு அணுகி, அன்பாகப் பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரும்போது உங்கள் பணியை நினைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்புத் தேவை: ஆனாலும், பணியின் தன்மையால் காவலர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், சில நேரங்களில் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. காவலர்கள் தங்களது பணிகளைத் தொய்வின்றிச் செய்ய, அவர்களது குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருந்தால்தான் மனநிறைவுடன் நாட்டுப் பணியை ஆற்ற முடியும்.
பெங்களூரு மையத்துடன் ஒப்பந்தம்: காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றைப் பேணி பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டமாகும். பெங்களூரில் உள்ள தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மருத்துவ மையத்துடன் (நிம்ஹான்ஸ்') தமிழக காவல் துறையில் முதன்மைப் பயிற்சியாளர்களை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதன்மைப் பயிற்சியாளர்கள் மூலம் காவலர்களுக்குத் தொடர் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தியாவிலேயே, ராணுவத்திலோ அல்லது துணை ராணுவத்திலோகூட இந்த மாதிரியான பயிற்சி இதுவரை அளிக்கப்படவில்லை. அனைத்து மாவட்டம், காவல் பிரிவுகள், சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஓராண்டுக் காலத்தில் 358 முதன்மைப் பயிற்சியாளர்கள் உருவாக்கப்படுவர்.
தீய ஆதிக்கங்கள்: காவலர்கள் தங்களது உடல்நலனில் எப்போதும் அக்கறை செலுத்த வேண்டும். தங்கள் பலவீனங்களை பலங்களாக மாற்றிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிப்பதையும் ஊக்கமூட்டும் உரைகள் கேட்பதையும் அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தீய ஆதிக்கங்களில் இருந்து விலகி இருங்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. உங்களது செயல்களுக்கும் நடத்தைக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். 
அசௌகரியமாக இருக்கும் நேரத்தில் கூட சுய கட்டுப்பாட்டைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
உயர்ந்த ஒழுக்க பண்புகள் உடையவர்களோடு பழக வேண்டும். பொறுமையுடன் இருக்க வேண்டும். பலன்கள் கண்ணுக்குப் புலப்படாத போதிலும் தொடர்ந்து செயலாற்றுங்கள் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
பங்கேற்றோர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மருத்துவ மையத்தின் இயக்குநர் டாக்டர் பெ.ந.கங்காதர், காவல் துறை டிஜிபி தே.க.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com