தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளை கண்காணிக்கும் பணி தீவிரம்

சுற்றுலாப் பயணிகள் போர்வையில் மாவோயிஸ்டுகள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதால் நக்ஸல் தேடுதல் படையினர் நீலகிரி, கேரள வனப்


சுற்றுலாப் பயணிகள் போர்வையில் மாவோயிஸ்டுகள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதால் நக்ஸல் தேடுதல் படையினர் நீலகிரி, கேரள வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் இரண்டாம் சீசன் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவர். இதை சாதகமாகப் பயன்படுத்தி தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகள், நீரோட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பாறை குகைகள் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல் புதூர், செங்கல் கொம்பை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் வழியாகவும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடக் கூடாது என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவின் பேரில் நக்ஸல் தேடுதல் படையினர் (என்எஸ்டி) துணை ஆய்வாளர் பழனிசாமி, சிறப்பு துணை ஆய்வாளர் சகாதேவன் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரு மாநில எல்லைப் பகுதிகளில் 22 கிலோ மீட்டர் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com