தமிழகத்தில் மேலும் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும்:  எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் மேலும் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும்:  எம்.ஆர். விஜயபாஸ்கர்


தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட குமரன் உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற ரூ.43 லட்சம் மதிப்பிலான பணிகளைத் தொடக்கி வைத்து அவர் மேலும் தெரிவித்தது: 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பேருந்துகளை உருவாக்கும் சி-40 என்ற அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றது, இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் பேட்டரியில் இயங்கக்கூடிய பேருந்துகளைப் பார்வையிட்டு இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அண்மையில் பங்கேற்றது பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் சென்னை 80 பேருந்துகளும், கோவையில் 20 பேருந்துகளும் என பேட்டரியில் இயங்கக்கூடிய 100 பேருந்துகளை இயக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மேலும், சி-40 அமைப்பினர் சென்னைக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர். சி-40 அமைப்புடன் ஒப்பந்த செய்யப்பட்டுள்ள ஒரு வாகனத்தின் விலை ரூ.2 கோடியாக உள்ளது. இதன் விலையைக் குறைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர். 
2040-க்குள் லண்டனை மாசு இல்லாமல் ஆக்கிடும் வகையில் 100 சதவீதம் மின்சார வாகனங்களை இயக்க முடிவு செய்துள்ளனர். டீசல் விலை உயர்வு போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. முதல்வர், துணை முதல்வரிடம் போக்குவரத்து கழகங்களுக்குத் தேவையான நிதியைக் கேட்டுள்ளோம். அவர்களும் நிதி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும். 
போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. தற்போதைய நிலையில் போக்குவரத்து கழகத்தில் எந்தவித சிக்கலும் இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com