தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல
பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட முதலாம் எண் புயல் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட முதலாம் எண் புயல் கூண்டு.


மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து வியாழக்கிழமை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆந்திரப் பிரதேசம், கலிங்கப்பட்டின கடலோரத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்கிறது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் தென் மேற்கில் இருந்து பலத்த காற்று வீசக்கூடும். மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறிப்பாக ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிஸாகடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றார்.
3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: பாம்பன், தூத்துக்குடி, நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
ஓரிரு இடங்களில் மழை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பரமக்குடியில் 60 மி.மீ.: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 60, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 40 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com