தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று முதல் விற்பனை

தூத்துக்குடியில் துறைமுகத்தில் இறக்கமுதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணல் விற்பனைக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இணையதளத்தில் தொடங்கியது. 
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று முதல் விற்பனை

தூத்துக்குடியில் துறைமுகத்தில் இறக்கமுதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணல் விற்பனைக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இணையதளத்தில் தொடங்கியது. 

இந்த மணலை TNsand இணையதளத்திலும்,  கைபேசி செயலி மூலமாகவும் இணையதள வழி கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம்

இதுதொடர்பாக, TNsand இணையதளத்தில், 

"இன்று செப்டம்பர் 21 ந் தேதி மாலை 4 மணி முதல், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன் பதிவு துவங்கப்பட உள்ளது. இந்த மணலை TNsand இணையதளத்திலும்,  கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனிலின் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதற்கட்டமாக மணல் மொத்தம் 11000 units மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஆகவே, முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த  வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும்.  TNsand ல் பதிவுசெய்யாத வாகனகளுக்கும் மணல் வழங்கப்படும். 

உச்சநீதிமன்றம் ஆணைப்படி,  ஒரு unit(சுமார் 4.5 MT)மணலின் விலை ரூ. 9,990.00 ஆகும். துறைமுகத்தில் விற்பனை செய்யும் மணலின் விலைப்பட்டியல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மணல் யூனிட்மணல் விலை
2ரூ. 19,980.00
3ரூ. 29,970.00
4ரூ. 39,960.00
5ரூ. 49,950.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com