தமிழக அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பு உள்ளது: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பு உள்ளது என்றார் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி.
தமிழக அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பு உள்ளது: அமைச்சர் தங்கமணி


தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பு உள்ளது என்றார் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பிறகு அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஏறத்தாழ ஒரு லட்சத்து இரண்டாயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின்தேவை அளவு குறைந்து இருப்பதால் 5 அலகுகளில் ஓர் அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தேவையானபோது அனல் மின் நிலையத்தில் முழு உற்பத்தியை தொடங்குவோம். ஏற்கெனவே கூறியதுபோல 6 நாள்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் எந்த அனல் மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. போதிய கையிருப்பு உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்பட வேண்டிய நிலக்கரி அனுப்பாததால் இருப்பு குறைந்துள்ளது.
கடந்த 2 நாள்களாக நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. நிலக்கரி குறைவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தற்போது நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய 6 லட்சம் டன் நிலக்கரி தூத்துக்குடிக்கு அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் வரும்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் பராமரிப்புப் பணிக்காகவும், கூடுதல் மின்பாதை அமைக்கும் வகையிலும் மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. 50 மெகாவாட் மின்பாதை 84 மெகாவாட் பாதையாக மாற்றும் பணி தொடங்கயது. மக்களிடம் தவறாக தகவல் பரவியதால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
பாளையங்கோட்டையில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படும். அங்கீகரிக்கப்படாத மின்வெட்டு எங்கும் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை மின்மிகை மாநிலமாகவே உள்ளது.
ஸ்டாலின் தவறான தகவல்: உற்பத்தி செய்யாத காற்றாலை மின்சாரத்துக்கு பணம் கொடுத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை தெரிவித்து வருகிறார். மின்சார வாரியத்துக்குதான் ரூ.11.78 கோடி தனியார் நிறுவனத்திடம் இருந்து வர வேண்டியுள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், கல்லாமொழியில் மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படும். சுமுகமான தீர்வு ஏற்பட்டால்தான் அங்கு நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படும். 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com