ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு இன்று ஆய்வு செய்கிறது: சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு இன்று ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு இன்று ஆய்வு செய்கிறது: சந்தீப் நந்தூரி


தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு இன்று ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் நந்தூரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழுவினர், ஆலையை ஆய்வு செய்ய இன்று மாலை துத்துக்குடி வருகிறார்கள். இன்று மாலை அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூவர் குழு மட்டுமே ஆய்வு செய்கிறது. அவர்களுடன் மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்கள் தங்களின் கருத்துக்களை குழுவிடம் தெரிவிக்கலாம். ஆய்வுக் குழு வருகை குறித்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை எழுத்துப் பூர்வமாகவோ, அல்லது அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம். 

ஸ்டெர்லைட் ஆலையை மட்டுமே குழு ஆய்வு செய்கிறது. தேவைப்பட்டால் வெளியேயும் ஆய்வு நடத்தலாம். ஞாயிறு காலை 11.30 மணியளவில் அரசு பாலிடெக்னிக்கில் குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com