முதல்வர் குறித்து அவதூறு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது

சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் குறித்து அவதூறு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது

திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் போலீஸார் குறித்தும் அவதூறாக பேசியதற்காக திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் கைது செய்தனர்.
அவதூறு பேச்சு:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற கருணாஸ் சர்ச்சைக்குரிய முறையில் போலீஸார் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசினார்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கருணாஸின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் கருணாஸை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கருணாஸ் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடியதால் பாதுகாப்புக்காக போலீஸார் குவீக்கப்பட்டுள்ளனர்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com