அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
 கோவை மாநகர காவல் துறை மற்றும் அரிமா சங்கம் சார்பில் மாநகரில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டத் தொடக்க விழா உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தமிழக காவல் துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டமானது மிகச் சிறந்த திட்டம். இது மன உளைச்சலுடன் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கோவை புறநகர் மற்றும் மாநகர் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முதல்வரிடம் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா பேசியதாவது: பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக காவல் நிலையங்களுக்கு வரும்போது காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக கழிக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப் 1 தேர்வுகளுக்கான பயிற்சி மையமும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
 இந்த நிகழ்ச்சியில், கோவை சரக டிஐஜி கார்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கவிஞர் கவிதாசன், அரிமா மாவட்ட ஆளுநர் (324 பி1) மோதிலால் கட்டாரியா, துணை ஆணையர்கள் எஸ்.லட்சுமி, சுஜித்குமார், எஸ்.செல்வகுமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுபா என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com