கருணாஸ் கைது: தலைவர்கள் கண்டனம்

மு.க.ஸ்டாலின் (திமுக): மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது.

மு.க.ஸ்டாலின் (திமுக): மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை கைது செய்திருப்பது, பாரபட்சமானது. தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் உயர்நீதிமன்றத்தையும், தமிழகக் காவல் துறையையும் தரக் குறைவாகப் பேசிய பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகர்கைது செய்யப்படவில்லை. இந்த நிலைப்பாடு அநீதியானது.
 சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் பேச்சு கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்டம் கடமையைச் செய்யும்போது, ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு சட்டம் சலுகை தந்து பாதுகாப்பது ஏன்?
 விஜயகாந்த் (தேமுதிக): ஜனநாயக நாட்டில் பலர், பல கருத்துக்களை அவரவர் நினைத்ததுபோல பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் பேசியது விமர்சனத்துக்குரியது. அதே சமயம், சர்க்கைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
 இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹெச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com