மதுரை மத்திய சிறையில் போலீஸார் சோதனை: பிளேடு, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் போலீஸார் மற்றும் சிறைக்காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் பிளேடுகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மத்திய சிறையில் போலீஸார் சோதனை: பிளேடு, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் போலீஸார் மற்றும் சிறைக்காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் பிளேடுகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறைக் கட்டுப்பாடுகளை மீறி சிறைக்குள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக "தினமணி' நாளிதழில் படங்களுடன் செய்திகள் வெளியாகின. இதையடுத்து சென்னை புழல், திருச்சி, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், புழல் சிறை அதிகாரிகள் சிலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் வெவ்வேறு சிறைகளில் சோதனை நடத்தப்பட்டபோதும் மதுரை மத்திய சிறையில் போலீஸார் சோதனை நடத்தவில்லை.
 இந்நிலையில், மதுரை மத்திய சிறையில், மதுரை சரக சிறைத் துறை டிஐஜி பழனி, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அருண் பாலகோபாலன் ஆகியோர் தலைமையில், சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தேவி, திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன், கரிமேடு காவல் ஆய்வாளர் மன்னவன் மற்றும் சிறை அதிகாரிகள் என மொத்தம் சுமார் 200 பேர் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
 காலை 5 மணிக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் சிறை வளாகம், விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாயும் சோதனையில் பயன்படுத்தப்பட்டது.
 மத்திய சிறை வளாகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சிறையில் கைதிகள் கழிவறை மற்றும் கைதிகளின் அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், கூரான இரும்புக் கம்பிகள், இரும்புக் குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 இந்த சோதனையின்போது சிறிய அளவிலான பிளேடு உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே பிடிபட்டதாகவும், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், செல்லிடப்பேசிகள் போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட வில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com