அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உள்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையேற்று பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை கொண்டுவந்து ஏழை, எளிய மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினார். அவர் வழியில் முதலர்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலர்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸýம் ஆட்சியில் இருந்தபோதுதான் இலங்கையில் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் வீடுகளை இழந்தனர்.
இதற்குக் காரணமான அப்போதைய திமுக அரசுக்கும், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும், அறிக்கை வாயிலாக ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். 
இன்றைக்கு அதிமுகவை அழித்துவிடலாம் என டிடிவி.தினகரன் போன்றோர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பகல் கனவு பலிக்காது. கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக கழகத்தை 100 ஆண்டுகள் கட்டிக்காக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டக் கழகச் செயலர் தூசி கே.மோகன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், கழக மகளிரணி துணைச் செயலர் எல்.ஜெயசுதா, இலக்கிய அணி துணைச் செயலர் ஏ.ஜெயகோவிந்தன், மாவட்டக் கழக அவைத் தலைவர் பி.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், கழக நிர்வாகிகள் எம்.எஸ்.நைனாகண்ணு, நளினிமனோகரன், விமலா மகேந்திரன், அமுதா அருணாச்சலம், டி.கருணாகரன், என்.ரமணி நீலமேகம்,  உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு ஒன்றிய கழகச் செயலர் பி.ராகவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com