புதுவை ஆளுநர் கிரண் பேடியின் நிதி அதிகாரம் குறைப்பு? மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் நிதி அதிகாரத்தைக் குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுவை ஆளுநர் கிரண் பேடியின் நிதி அதிகாரம் குறைப்பு? மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் நிதி அதிகாரத்தைக் குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுவை மாநில அரசு நிகழாண்டில் ரூ. 7,530 கோடிக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது. எனினும், துறை ரீதியாக அந்தப் பணத்தைச் செலவிடுவதில் மாநில நிதித் துறைக்குக் குறைவான அதிகாரமே வழங்கப்பட்டது. மேலும், நிதித் துறை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோப்புகளும் தனது ஒப்புதலைப் பெற்ற பின்னரே அமல்படுத்தப்படும் என கிரண் பேடி கூறி வந்தார். இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆளும் காங்கிரஸ் அரசு புகார் கூறி வந்தது.
இதுதொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த மாதம் 28 -ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மாநில நிதித் துறைச் செயலர், அமைச்சர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகார வரம்பை உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதினார்.
இந்தக் கடிதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து புதுவை மாநிலத் தலைமைச் செயலருக்கு செப்டம்பர் 27- ஆம் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், நிதி அதிகாரச் சட்டம் 1978, 13 (3)-இல் குறிப்பிட்டுள்ளபடி, நிதி ஒதுக்கீட்டுக்கு அதிகாரம் வழங்கும் குழுக்களுக்கான வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். அப்போதுதான் சிறந்த நிர்வாகத்தை வழங்க முடியும். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில அரசு உயர் அதிகாரிகள்  தெரிவித்ததாவது: தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை தலைமைச் செயலர் அஸ்வனி குமார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் என்பதால், ஆளுநர் கிரண் பேடி கண்டிப்பாக நிதி விவகாரங்களில் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
இதன் மூலம் நிதி விவகாரத்தில் ஆளுநருக்கு இதுவரையில் இருந்த வந்த அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும் என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com