6 தொகுதிகளில் முதல்வர் 3 நாள் தேர்தல் பிரசாரம்

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6 மக்களவைத் தொகுதிகளில் 3 நாள்கள் மேற்கொள்ள உள்ள பிரசாரப் பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 தொகுதிகளில் முதல்வர் 3 நாள் தேர்தல் பிரசாரம்


 முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6 மக்களவைத் தொகுதிகளில் 3 நாள்கள் மேற்கொள்ள உள்ள பிரசாரப் பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து மார்ச் 24-ஆம் தேதி திருவள்ளூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
மார்ச் 22: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏற்காடு கருமந்துறை செல்வ விநாயகர் கோயில் அருகே காலை 9 மணிக்கு முதல்வர் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து வாழப்பாடி, அயோத்தியாபட்டினம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதன் பின், மாலை 3.15 மணியளவில் சேலத்திலிருந்து புறப்பட்டு தருமபுரி தொகுதிக்கு உள்பட்ட தொப்பூர், நல்லம்பள்ளி, தருமபுரி டவுன், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு காரிமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து இரவு சேலத்தில் தங்குகிறார்.
மார்ச் 23: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பத்தூர்-சேலம் கூட்ரோட்டில் காலை 9 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கி திருப்பத்தூர், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதன்பின், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன், ஆம்பூர் டவுனில் உள்ள 4 இடங்களில் மதியம் ஒரு மணி வரை பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு, மாலை 4 மணியிலிருந்து குடியாத்தம் ஆம்பூர் பைபாஸில் தொடங்கி உமாராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம் பஜார், கே.வி.குப்பம், லத்தேரி, சித்தூர் பேருந்து நிலையம், வேலூர் புது மாநகராட்சி, மண்டித் தெரு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். வேலூரில் இரவு தங்குகிறார்.
மார்ச் 24: அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட காட்பாடி வள்ளலார் பகுதி, ஆற்காடு பேருந்து நிலையம், முத்துக்கடை பேருந்து நிலையம், சோளிங்கர் பேருந்து நிலையம், பாணாவரம் கூட்டுரோடு, காவேரிப்பாக்கம் பூங்கா, பனப்பாக்கம் பேருந்து நிலையம், நெமிலி, அரக்கோணம் பேருந்து நிலையம் திருத்தணி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் தொகுதிக்குள்பட்ட திருவள்ளூர், தாமரைப்பாக்கம் கூட்ரோடு, கும்மிடிப்பூண்டி,  பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து இரவு சென்னை திரும்புகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com