தேர்தலுக்குப்பின் மோடி, அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: மு.க.ஸ்டாலின்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசுகிறார் மு.க. ஸ்டாலின்
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசுகிறார் மு.க. ஸ்டாலின்


நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். 
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது:
திருவாரூர் கருணாநிதியின் சொந்த ஊர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 2,  3-ஆக பிளவுபடுகிறது. பிளவுபட்ட ஓர் அணியில் 18 பேர் ஒன்று சேர்ந்து, முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரை  சந்தித்தார்கள். முதல்வரை மாற்றக் கோரினர். இந்த 18 பேரையும் சட்டப் பேரவைத் தலைவர் நீக்கினார். நீதிமன்றம் இதை சரியென்று உறுதி செய்தது. 
இதேபோல் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் ஆட்சி நீடிக்கக் கூடாது என வாக்களித்தனர். ஆனால், அவர்கள் பதவியில் இன்றும் உள்ளனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு விரைவில் வரும். அப்போது, 18 தொகுதிகளின் தேர்தல் முடிவும் வரும். இதன்மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஊழலை ஒழிப்பதே முக்கியம் எனக்கூறி வரும் மோடி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். முதல்வர் வசமுள்ள துறைகளில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதேபோல் துணை முதல்வர் செய்திருக்கிற ஊழல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன. அப்படிப்பட்டவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள பிரதமர் மோடிக்கு ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லை. ரஃபேல் விவகாரம் ஒன்றே போதும். 
நம்மைவிட, மோசமாக அதிமுகவை திட்டிய மற்றொரு கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. முதல்வர், தில்லிக்கு சென்றபோது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே நீங்கள் ராஜிநாமா செய்வீர்களா எனக் கேட்டார்கள், யார் மீது ஊழல் இல்லை. எனவே ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் முதல்வர். அவரோடு கூட்டணி வைத்திருப்பவர் மோடி.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி: மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை கடந்த முறை தெரிவித்தார். அவற்றில் ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக்கப்படும் என்றார். அது நிறைவேறவில்லை. கருப்புப் பணத்தை வெளிநாடு வங்கிகளில் இருந்து மீட்டு வந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால் ரூ.15 கூட வழங்கவில்லை. 2 கோடி பேருக்கு வேலை என்றார். அதையும் அவர் வழங்கவில்லை.
ஜெயலலிதா ஓய்வுக்கு சென்று வந்த கொடநாட்டில் 5 கொலைகள் நடந்துள்ளன. ஏன் ஏற்பட்டது என்று கேட்டதற்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.
ஏமாற்று வேலை:  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய போது, அதை திமுக வரவேற்றது. அதற்கு பிறகு அந்த தீர்மானத்தை தில்லிக்கு அனுப்பியதாக கூறினர். ஆனால் தில்லியில் அந்த தீர்மானம் வரவில்லை என்று கூறுகிறார்கள். இதுவரை எத்தனையோ முறை தில்லிக்கு போய் வந்து விட்டனர். அப்போதெல்லாம் வலியுறுத்தாமல் இப்போது செய்து தருவோம் என்று கூறுவது ஏமாற்று வேலை. அதிமுக அரசு நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. 
 எனவே மத்திய, மாநில அரசுகளை அகற்ற மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் ஸ்டாலின்.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com