வறட்சி பாதித்த பகுதிகளில் நீர் மேலாண் திட்டங்கள்: அதிமுக தேர்தல் வாக்குறுதி

வறட்சி பாதித்த பகுதிகளில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
வறட்சி பாதித்த பகுதிகளில் நீர் மேலாண் திட்டங்கள்: அதிமுக தேர்தல் வாக்குறுதி

வறட்சி பாதித்த பகுதிகளில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதிமுக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகள் விவரம்:-
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளில் நீர்ப்பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலான நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  பெரும்மழை, வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல புதிய திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தி, நிதி ஆதாரத்தைப் பெற்று விரைந்து செயல்படுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ மழைக் காலங்களில்  அதிகளவு மழையும், வெள்ளமும் ஏற்படுகின்றன. அவற்றைக் கொண்டு கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச்சரகம், நரசீபுரம், தாளியூர் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்படும். மேலும், குளம்-குட்டைகளில் மழை நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்களுக்கான நிதியினை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com