ஹோமியோபதியே பிரதானமாக இருக்க வேண்டும்: நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வலியுறுத்தல் - Dinamani - Tamil Daily News

ஹோமியோபதியே பிரதானமாக இருக்க வேண்டும்: நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வலியுறுத்தல்

First Published : 08 April 2013 06:25 AM IST


மாற்று மருத்துவம் என்பதில் ஹோமியோபதியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வலியுறுத்தினார்.

டாக்டர் கோப்பிகர்ஸ் ஹோமியோபதி அறக்கட்டளை சார்பில் ஹோமியோபதியில் முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பயிற்சி முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தொடங்கி வைத்து பேசியது: நான் கல்லூரியில் படிக்கும்போது ஹோமியோபதி குறித்து தெரிந்து கொண்டேன். அப்போது இருந்து ஹோமியோபதி முறையில் சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால், ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெறுவதற்கு எப்போதாவதுதான் நோயாளிகள் வருகின்றனர். அதனால் ஹோமியோபதியில் சிகிச்சை பெற வருபவர்களைத் தொடர்ந்து இந்த மருத்துவத்தில் சிகிச்சை பெறும் வகையில் அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், மாற்று மருத்துவம் என்பதில் ஹோமியோபதி பிரதானமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் ஹோமியோபதி முதலுதவி குறித்து டாக்டர் கோப்பிகர்ஸ் ஹோமியோபதி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பி.வி.வெங்கட்ராமன் கூறியது: ஹோமியோபதியில் 4000 மருந்துகள் உள்ளன. இதில், 40 மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தக் கூடியது. கோப்பிகர்ஸ் அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு ஹோமியோபதியில் முதலுதவி அளிப்பது குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

தற்போது, கையில் வெட்டுக்காயம், தீக்காயம், சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளோம். மேலும், சளி, தும்மல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு நோய்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கிறோம். மேலும், குழந்தைகளுக்கான பிரச்னைகள், பெண்களுக்கான பிரச்னைகளுக்கும் முதலுதவி குறித்து பயிற்சி அளித்தோம் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் குஷாலி கம்பீரன், டாக்டர் முகமது அலி, டாக்டர் அனந்தராமன், டாக்டர் ஜெய்ஸ், டாக்டர் ஜெகதா ஆகியோர் முதலுதவி குறித்து விளக்கினர். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.