ஸ்பெக்ட்ரம் ஊழல்: அ.தி.மு.க.வினர் நூதன பிரசாரம் - Dinamani - Tamil Daily News

ஸ்பெக்ட்ரம் ஊழல்: அ.தி.மு.க.வினர் நூதன பிரசாரம்

First Published : 11 April 2011 04:42 AM IST


ஸ்ரீவைகுண்டம்,ஏப்.10: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் நூதன முறையில் வாக்காளர்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் பி.ஆர். மனோகரன் போட்டியிடுகிறார்.

 தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் தி.மு.க.வினர், தங்கள் ஆட்சியில் செய்த நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குசேகரித்து வருகின்றனர்.

 அ.தி.மு.க.வினர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை உலக மகா ஊழல் என ரூபாய் நோட்டுபோல துண்டுப்பிரசுரமாக அச்சடித்து அதை வீடுவீடாக விநியோகித்து வருகின்றனர்.

 இதில், முதல் பக்கத்தில் தி.மு.க. பாங்க் ஆப் இந்தியா, ரூ. 1.76 லட்சம் கோடி என குறிக்கப்பட்டுள்ளது. கீழே ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடியை குறிக்கும் வகையில் எழுத்தால் எழுதப்பட்டுள்ளது.

 இடதுபுறம் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி படங்களும், வலதுபுறத்தில் ராசா, கனிமொழி படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

 பின்பக்கத்தில் தமிழக மக்களின் அவலநிலை குறித்தும், கருணாநிதியின் குடும்ப அரசியல் குறித்தும் கருத்துப்படம் வரையப்பட்டு, இந்த அவலநிலையை மாற்ற ஜெயலலிதாவின் ஆட்சி மலர திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிப்பீர் என அச்சிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.