சபரிமலை நெரிசலில் 102 பேர் பலி: இறந்த தமிழக பக்தர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம்: முதல்வர் - Dinamani - Tamil Daily News

சபரிமலை நெரிசலில் 102 பேர் பலி: இறந்த தமிழக பக்தர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம்: முதல்வர்

First Published : 17 January 2011 03:16 AM IST

சென்னை, ஜன. 16: சபரிமலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழக பக்தர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

 சபரிமலையில் புல்மேடு பகுதியில் உள்ள உப்புப்பாறையில் வெள்ளிக்கிழமை மகர ஜோதி தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்கள் கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. அப்போது மிதிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆகும். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 என தெரியவந்துள்ளது.

 தலா 5 லட்சம்-கேரளம் அறிவிப்பு: சபரிமலை நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்தார். சபரிமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கேரள அரசு, தேவஸ்தான போர்டு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

 நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 96 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 37 பேர், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் 23 பேர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 31 பேர், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 2 பேர், இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர்.

 இறந்தவர்களின் உடலை விமானம் மூலம் எடுத்துச்செல்ல ஆகும் செலவையும், ஆம்புலன்ஸ் செலவையும் கேரள அரசே ஏற்கும். இறந்தவர் உடலுடன் வருவாய்த்துறையிலிருந்து ஒருவரும், காவல்துறையிலிருந்து ஒருவரும் செல்வர். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் நிவாரணத்தொகை அளிக்கப்படும் என்றார் அச்சுதானந்தன்.

 சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது வெள்ளிக்கிழமை ஜீப் ஒன்று மோதியது. இதையடுத்து நெரிசல் ஏற்பட்டது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.