• Tag results for சென்னை

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா

தமிழக அரசு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது.

published on : 30th September 2017

டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் காண்பதற்கான டிக்கெட்டை வாங்கிய மகிழ்ச்சியில் ரசிகைகள். டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவில் இருந்தே சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலக கவுண்டர்களில் காத்து கிடந்த ரசிகர்கள்.

published on : 11th September 2017

பழமையான நீராவி ரயில் இயக்கம்

1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் 162 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்ஜின் மூலம் சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பயணம் நடைபெற்றது. பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர்.

published on : 11th September 2017

378வது பிறந்தநாள் காணும் சென்னை மாநகரம்

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை இன்று 378வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை என அழைக்கப்படும் மதராஸ் நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வந்தோரை வாழ வைத்த தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாறு மிகவும் பழமையானது. தென்னிந்தியாவின் வாசலான சென்னை ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது. 1835ல் சென்னை மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. 1871ல் சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1876ல் சென்னை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 1888ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப்பான மதராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1900ல் மூர்மார்க்கெட் திறக்கப்பட்டது. 1913ல் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

published on : 22nd August 2017

சென்னையில் பலத்த மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவிய நிலையில் சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், கிண்டி, சேப்பாக்கம், அண்ணா நகர் என பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது.

published on : 10th July 2017

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்பட்டன.

published on : 7th June 2017

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு

தீ விபத்தால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்க பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு, ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

published on : 4th June 2017

இடிக்கப்பட உள்ளது சென்னை சில்க்ஸ் கட்டடம்

சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் உள்ள ‘சென்னை சில்க்ஸ்’ ஏற்பட்ட தீயால், 7 மாடி கட்டிடமும்,  கோடிக்கணக்கான ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

published on : 1st June 2017

பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

தி.நகரில் உள்ள 'தி சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட மின் கசிவால் கடையில் உள்ள துணிகள் எரிந்தன, நகைகள் உருகின. 12 மணிநேரமாக போராடி, 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், தீ தொடர்ந்து எரிவதால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி, எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

published on : 31st May 2017

5வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் 20 வருடங்களுக்கு முன்பிருந்த ரசிகர்கள், இப்போதும் அதே உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை நான் நேரடியாகப் பார்க்கும்போது, சிலருக்கு வயதாகிவிட்டதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

published on : 19th May 2017

கார் கவிழ்ந்து விபத்து

சென்னை பாரிமுனை அருகே பாலத்தில் சென்ற கார் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து. இதில் பயணம் செய்த 3 பேயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

published on : 30th April 2017

அண்ணா சாலையில் மீண்டும் விரிசல்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை விரிசல் சரி செய்யப்பட்டு, பிற்பகலில் படிப்படியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

published on : 12th April 2017

அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியின் காரணமாக, சென்னை அண்ணாசாலை சர்ச் பார்க் பள்ளி அருகே ஏற்பட்ட பள்ளத்தை முழுமையாகச் சீரமைத்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். சீரமைக்கப்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய வாகனப் போக்குவரத்து.

published on : 11th April 2017

அண்ணா சாலையில் திடீர் பள்ளம்

ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது, இதில் மாநகர பேருந்து, காரும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காரையும், பேருந்துந்தையும் கிரேன் மூலம் மீட்டனர். இந்நிலையில் பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

published on : 10th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை