• Tag results for சை வெளியீட்டு விழா

கூத்தன் இசை வெளியீட்டு விழா

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படம் 'கூத்தன்'. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ், ஜாக்குவார்தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

published on : 7th September 2018

சீமராஜா இசை வெளியீட்டு விழா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 'சீமராஜா இசைத்திருவிழா' என்ற பெயரில் மதுரையில் நடைபெற்றது. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 4th August 2018

இரும்புத்திரை இசை வெளியீட்டு விழா

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புதிரை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் விஷால், விஷாலின் தாய் லட்சுமிதேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

published on : 9th May 2018

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா

திரு இயக்கத்தில் ’மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்து கொண்டார். இதில் கார்த்திக், கௌதம், ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது.

published on : 27th April 2018

அனிருத் இசை வெளியீட்டு விழா

பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிப்பில், மகேஷ்பாபு, காஜல், சமந்தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை பாடல்கள் – திருமலை சோமு, கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா. ஆகியோர் எழுதியுள்ளனர்.

published on : 21st December 2017

பலூன் படத்தின் இசை விழா

யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் 'பலூன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ். இப்படம் காமெடி நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

published on : 13th December 2017

மேயாத மான் இசை வெளியீட்டு விழா

மேயாத மான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் இந்த இசை விழாவில் கலந்துக் கொண்டனர்.

published on : 8th October 2017

பள்ளிப் பருவத்திலே இசை விழா

வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாண்டிராஜ், சற்குணம், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, மற்றும் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், அபிராமி ராமநாதன், தேவயானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 20th September 2017

திருட்டுப்பயலே 2 இசை வெளியீட்டு விழா

பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் சுசிகணேசன் இயக்கி வரும் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

published on : 15th September 2017

வேலையில்லா பட்டதாரி 2 இசை விழா

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.

published on : 27th June 2017

அதாகப்பட்டது மகாஜனங்களே ஆடியோ விழா

நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகும் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு.

published on : 16th June 2017

பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு 'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

published on : 16th April 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை