• Tag results for தீ விபத்து

மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் தீ விபத்து

மும்பையில் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்ப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

published on : 29th December 2017

கொல்கத்தா கட்டிடத்தில் தீ விபத்து

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் ஜவாஹர் லால் நேரு சாலையில் உள்ள 19 மாடிக் கட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில், கட்டடத்தின் 16-ஆவது தளத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை.

published on : 20th October 2017

லண்டன் தீ விபத்து

மேற்கு லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரென்ஃபெல் டவர் 24 மாடிகளை கொண்டு, 1974ஆம் ஆண்டு கட்டட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பாகும்.

published on : 14th June 2017

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு

தீ விபத்தால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்க பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு, ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

published on : 4th June 2017

பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

தி.நகரில் உள்ள 'தி சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட மின் கசிவால் கடையில் உள்ள துணிகள் எரிந்தன, நகைகள் உருகின. 12 மணிநேரமாக போராடி, 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், தீ தொடர்ந்து எரிவதால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி, எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

published on : 31st May 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை