• Tag results for பதவி

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வராக குமாரசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா. விழாவில் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்திய சோனியா, ராகுல் மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் அஜித் சிங்.

published on : 24th May 2018

ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் பேசுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பதவி, புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்றார். நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதே எங்கள் கொள்கை என்றார்.

published on : 31st December 2017

எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் தினகரன்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று அவர் பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார். இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் டி.டி.வி. தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

published on : 29th December 2017

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த நிலையில், சோனியா காந்திக்கு தீடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அவரால் அரசியலில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் இப்பதவியை ஏற்றார் ராகுல். காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.

published on : 17th December 2017

புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி திருமதி.எஸ். ரமாதிலகம், திருமதி ஆர். தரணி, திரு. ஆர். ராஜமாணிக்கம், திருமதி டி. கிருஷ்ணவள்ளி, பெங்கியப்பன், திருமதி ஹோமலதா ஆகிய ஆறு பேரை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தார். இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்றதையாடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

published on : 1st December 2017

துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

published on : 11th August 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை