• Tag results for மான்

சீமராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீமராஜா'. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 12th September 2018

நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் நாக சைதன்யா, அர்ஜுன் ரெட்டி, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

published on : 11th May 2018

நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிவரும் இப்படத்தை, நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் நாக சைதன்யா, அர்ஜுன் ரெட்டி, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

published on : 9th May 2018

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.  இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

published on : 1st March 2018

க்ரூகர் தேசிய பூங்கா

காட்டு விலங்குகளை வேட்டையாடி அதனை புகைப்படம் எடுத்து, மனிதாவிமானமின்றி ஃபேஸ்புக்கில் பகிர்வதை வழக்கமாக கொண்ட இவ்வுலகத்தில், தென்னாப்பிரிக்காவின் 'க்ரூகர் தேசிய பூங்கா'வில் சுற்றி திரியும் பல அறிய காட்டு விலங்குகளின் புகைப்படங்கள். படங்கள் உதவி: டாக்டர் வித்யா சங்கர், புதுதில்லி.

published on : 2nd January 2018

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நடைபெற்றது. இதையொட்டி ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை நேரலையாக இசையமைத்தார் என்பது கூறிப்பிடத்தக்கது.

published on : 30th December 2017

சர்வம் தாளமயம் படத்தின் துவக்க விழா

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இசையை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

published on : 30th November 2017

இப்படை வெல்லும் இசை வெளியீட்டு விழா

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்து உள்ளார். சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் உதயநிதி, மஞ்சிமா மோகன், இயக்குனர் கெளரவ், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குநர்கள் திரு, அறிவழகன், ஏ.எல்.விஜய், லைகா புரொடக்‌ஷன் ராஜுமகாலிங்கம், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

published on : 7th November 2017

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா

முருகனின் அறுபடை வீடுகளுள் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நிகழ்வான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலில் கஜமுக சூரனையும், பின்பு சிங்கமுக சூரனையும், அடுத்து சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்தா‌ர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோஷம் முழங்க, பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

published on : 25th October 2017

மேயாத மான் இசை வெளியீட்டு விழா

மேயாத மான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் இந்த இசை விழாவில் கலந்துக் கொண்டனர்.

published on : 8th October 2017

மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.. மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

published on : 22nd August 2017

பொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் என பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர்.

published on : 25th July 2017

மாம் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீதேவி கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் ‘மாம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும். ஸ்ரீதேவி நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

published on : 5th July 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை